காசாவில் 2-ம் கட்ட போர் நிறுத்தம்: விரைவில் அமல்
காசா, காசாவில் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் - இஸ்ரேல் தரப்பு சம்மதம் தெரிவித்ததையடுத்து, காசாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலானது. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக அந்நாட்டின் கடைசி பிணைக்கைதியின் உடல் பாகங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே. இஸ்ரேலின் காவல் துறையில் பணியாற்றிய வீலி என்ற நபர் ஹமாஸால் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் பாகங்களை தேடி மீட்பதில் இழுபறி நீதித்து வந்தது. இந்த நிலையில், நேற்று அவரது உடல் பாகங்கள் முழுமையாக மீட்கப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியிருக்கிறது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இரண்டாம் கட்டத்துக்கு நகர இருக்கிறது. அதன்படி, காசாவை நிர்வகிக்க பாலஸ்தீன அரசு அமைக்கப்படும் மற்றும் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச நிலைத்தன்மைப் படை ஒன்றும் உருவாக்கப்படும். இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமலானால், ரபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாலஸ்தீனர்கள் தடையின்றி பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
