ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்
டெஹ்ரான், ஈரானில் சுமார் ஒரு மாதமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த போராட்டக்காரர்களை அரசு இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 6 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு கூட்டாக மரண தண்டனை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஈரானும், அமெரிக்கா தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்தது. இந்த நிலையில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது படைகளை நகர்த்தி வருகிறது. அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கள் மற்றும் பிற போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி விரைகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். செங்கடலில் ஈரானை நோக்கி வரும் அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் அங்கு போர்பதற்றம் அதிகரித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
