ஹமாஸ் வசமிருந்த கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்பு: இஸ்ரேல் தகவல்
ஜெருசலேம்,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,200-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த போர் மூண்டது. 2 ஆண்டுகளாக இந்த போர் நீடித்த நிலையில் தற்போது காசாவில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே பல கட்டங்களாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பலர் உயிருடனும், சிலரின் உடல்களும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன. எனினும் கடைசி பணயக்கைதியான ரான் ஜவிலி என்பரின் உடல் ஒப்படைக்கவில்லை. எனவே அதை கண்டுபிடிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் ஒன்றில் தீவிரமாக தேடியது. தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு விட்டது.இஸ்ரேலின் கடைசி பணயக்கைதி உடலும் மீட்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். தான் வாக்குறுதி அளித்தபடி அனைத்து பணயக்கைதிகளும் மீட்கப்பட்டு விட்டதாக கூறினார். கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து 2-வது கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
