திருமண வதந்திகளுக்கு பதிலளித்த ஈஷா ரெப்பா
சென்னை,தெலுங்கு பட இயக்குனரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி'. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் ரீமேக்கான இந்தப் படம், பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சமீப காலமாக, தருண் பாஸ்கரும் ஈஷா ரெப்பாவும் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வந்தன. இதற்கு இருவரும் எந்த பதிலும் தெரிவிக்காதநிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனின்போது இந்த செய்திக்கு ஈஷா ரெப்பா பதிலளித்தார். அது புரமோஷனின் ஒரு பகுதிதான் என்றும் திருமண செய்திகளைப் பற்றி தான் அதிகம் கவலைப்படவில்லை என்றும் கூறினார். மேலும், ’நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை நம்மால் ஒருபோதும் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
