டிரோல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ராஷ்மிகா மந்தனா
சென்னை, திரை உலக பிரபலங்களை சமூக வலைதளங்களில் ‘டிரோல்’ செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன்னணி கதாநாயகிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். அதை நான் ஏன் செய்ய வேண்டும்?” என்று கூறினார். மேலும், “சிலர் பணத்திற்காகவே பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள். நான் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறேன். சினிமாவிற்கு வந்தபோது எப்படி இருந்தேனோ, அதேபோல தான் இன்றும் இருக்கிறேன். முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என ராஷ்மிகா தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
