சாய் தன்ஷிகா நடித்த "யோகிடா" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை, பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். இவர் "மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகிடா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்பர் பெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக (இன்ஸ்பெக்டர்) நடித்துள்ளார். ஒரு கொலையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
