ஓடிடியில் வெளியாகும் கார்த்தியின் 'வா வாத்தியார்'...எதில், எப்போது பார்க்கலாம்?
கார்த்தி நடிப்பில் வெளியான 'வா வாத்தியார்' படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன நாயகன் திட்டமிட்டபடி வெளியாகாததால், கார்த்தியின் வா வாத்தியார் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த 14-ம் தேதி வெளியானது. நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. இப்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோவில் நாளை (ஜனவரி 28) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
