புது படங்களை பின்னுக்குத் தள்ளி.. வசூலில் சாதனை படைக்கும் 'மங்காத்தா'
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘மங்காத்தா’ அமைந்து இருந்தது. இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 23ந் தேதி ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. ‘மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புதிய திரைப்படத்திற்கு கிடைக்கும் அளவிற்கு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்திற்கு வசூல் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மங்காத்தா படம் ரீ ரிலீஸில் இதுவரை ரூ. 17.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 16 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஓப்பனிங் வசூலில் ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் மங்காத்தா அடித்து நொறுக்கியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
