சற்று குறைந்த தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை..!

  தினத்தந்தி
சற்று குறைந்த தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை..!

சென்னை, தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபநாட்களாக காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் விலை மாற்றம் இருந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையானது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ச்சியாக இன்றும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,87,000-க்கும், கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.387-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 27.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,680 26.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,200 25.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,18,000 24.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,18,000 23.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,400 22.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

மூலக்கதை