மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் சதம்...வரலாறு படைத்த வீராங்கனை
சென்னை,மகளிர் பிரீமியர் லீக்-ல் சதமடித்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மும்பை வீராங்கனை ஸ்கைவர்-பிரண்ட் ஆர்சிபி-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் உடன் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். இங்கிலாந்து வீராங்கனையான இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
