சீனா: ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்
ஷாங்காய், இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் வர்த்தக தலைநகர் என அறியப்படும் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதன்படி, தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் தலைமையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில், சீனாவில் உள்ள இந்தியாவின் வம்சாவளியை சேர்ந்த 400 நண்பர்கள், சீன சமூக மக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரக அதிகாரிகள் 20 பேர் உள்பட பலர் பங்கு பெற்றனர். அப்போது, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டு, ஜனாதிபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை, தூதரக அதிகாரி வாசித்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என முழக்கங்களை எழுப்பினர். இதன்பின்னர் திரண்டிருந்த கூட்டத்தினரின் முன் உரையாற்றிய தூதரக அதிகாரி பிரதீக், ஷாங்காய் நகரில் இருந்து இந்திய நகரங்களுக்கு தினசரி இயக்கப்படும் விமான சேவைகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் உள்ள புதிய வசதிகளை குறிப்பிட்டு பேசினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
