சரியான நேரத்தில், பெருந்தன்மையான ஆதரவு அளித்தனர்... இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் குடியரசு தின வாழ்த்து
கொழும்பு,நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. விமான சாகசங்கள், ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் என குடியரசு தின கொண்டாட்டம் களை கட்டியது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட செய்தியில், இந்தியாவுடனான நெருங்கிய மற்றும் பன்முக தன்மையுடனான நட்புறவை இலங்கை பெரிதும் மதிக்கின்றது. பொருளாதார மீட்சி, இணைப்பு, எரிசக்தி, ஆரோக்கியம் மற்றும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சி போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டு நட்புறவு வலுப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, இக்கட்டான தருணங்களில் இருந்து இலங்கை மீள்வதற்கும் மற்றும் எங்களுடைய கடினம் வாய்ந்த சூழ்நிலைகளில், சீர்திருத்த முயற்சிகளில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதற்காகவும், சரியான நேரத்தில், தொடர்ந்து, பெருந்தன்மையுடன் ஆதரவு அளித்து வருவதற்காகவும், இந்தியாவுக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்து கொண்டார். இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனிற்காக உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
