பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; 100 பேர் மாயம்
மணிலா,பிலிப்பைன்சின் தெற்கே பசிலன் மாகாணத்தில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் பலியானார்கள். இதுபற்றி வெளியான தகவலில், அந்த படகு, ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவு நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல் அறிந்து, கடலோர காவல் படையினர், கடற்படை கப்பல்கள், மீன்பிடி படகுகள் உடனடியாக மீட்பு பணிக்கு சென்றன. இதில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 244 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகு விபத்தில் சிக்கியதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் புயல்கள், பராமரிப்பற்ற படகுகள், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் கடலில் இதுபோன்ற படகு விபத்துகள் ஏற்படுகின்றன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
