60 ஆயிரம் டன் உயர்தர அமெரிக்க கோதுமை வங்காளதேசம் சென்றடைந்தது
டாக்கா,அமெரிக்க வேளாண் துறை, அமெரிக்க கோதுமை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கடந்த ஆண்டு ஜூலையில் வங்காளதேச அரசு புரிந்துணர்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி, 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் டன் அமெரிக்க கோதுமையை கொள்முதல் செய்வது என முடிவாகி உள்ளது. இதனால், அமெரிக்க வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கான சந்தை வளர்ச்சியில் வங்காளதேசம் முக்கிய பங்காற்றுகிறது. இதன்படி, அமெரிக்காவின் 60 ஆயிரம் டன் உயர்தர சிவப்பு கோதுமை வங்காளதேசம் சென்றடைந்தது. இதேபோன்று அமெரிக்காவின் வாஷிங்டன், ஆரேகான் மற்றும் இதஹோ மாகாணங்களின் உற்பத்தியான 1.73 லட்சம் டன் அளவிலான மென்மையான வெள்ளை கோதுமையும் சென்றடைந்து உள்ளது. இதனை வங்காளதேசத்திற்கான அமெரிக்க தூதர் பிரென்ட் கிறிஸ்டென்சன் மற்றும் சத்தோகிராம் துறைமுக கழக தலைவர் மொனிருஜ்ஜாமன், உணவு பாதுகாப்பு செயலாளர் முகமது பிரோஸ் சார்கர் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுவதுடன், இருதரப்பு உறவும் வலுப்பட்டு வருகிறது. இதேபோன்று வங்காளதேசத்திற்கு அமெரிக்காவின் சோயா பீன்ஸ் ஏற்றுமதியும் மும்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
