டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 77-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். ஜனாதிபதி கொடியேற்றியதும் விமானப்படை வானில் ஹெலிகாப்டர்களில் மலர்கள் தூவப்பட்டன. அப்போது, சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்து வருகிறது. லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கண்டுகளித்து வருகின்றனர். அதேபோல, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
