விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ் - எதில் தெரியுமா?
சென்னை,இந்தியா-நியூசிலாந்து இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீந்த்தியது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது, இதில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கேப்டனாக 50 வெற்றிகளுடன் ரோகித் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 42 வெற்றிகளுடன் தோனி உள்ளார். 32 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் விராட் கோலி இருந்தார். தற்போது 33 வெற்றிகளுடன் விராட் கோலியை சூர்யகுமார் யாதவ் முந்தியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 சர்வதேச தொடரை கூட இழந்ததிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ரோகித் சர்மா: 50 வெற்றிகள்எம்.எஸ். தோனி: 42 வெற்றிகள்சூர்யகுமார் யாதவ்: 33 வெற்றிகள்விராட் கோலி: 32 வெற்றிகள்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
