கனடாவில் மற்றொரு சம்பவம்; இந்திய வம்சாவளி இளைஞர் பொது வெளியில் படுகொலை
டொரண்டோ,கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், கனடாவின் பர்னாபி நகரில் பொது வெளியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தில்ராஜ் சிங் கில் (வயது 28) என்ற இளைஞர் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். வான்கோவர் பகுதியை சேர்ந்தவரான கில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் நடந்து வரும் கும்பல் தாக்குதலின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் பற்றி அறிந்து ராயல் கனடா போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றபோது தில்ராஜ் படுகாயங்களுடன் போராடியபடி இருந்திருக்கிறார். உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவ பகுதியருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபோன்ற வன்முறையின்போது, வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி செல்வது என்பது ஒரு பொதுவான யுக்தியாக செய்யப்பட்டு வருகிறது என போலீசார் குறிப்பிட்டனர். சமீபத்தில் அபோட்ஸ்போர்டு பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்சன் சிங் சாஹ்சி என்ற தொழிலதிபர் சுட்டு கொல்லப்பட்டார். அதனுடன், இந்த படுகொலைக்கு தொடர்பிருக்கும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
