பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அதிர்ச்சி
திம்பு, திபெத் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த சூழலில், இன்று மாலை பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், திபெத்தில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் ரிக்டரில் 3.7 அளவிலான நிலநடுக்கம் பதிவானது. நேற்றும் திபெத்தில் ரிக்டரில் 3.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலையில், தஜிகிஸ்தானில் இன்று காலை 6.06 மணியளவில் ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த சூழலில், பூடானில் காலை 11 மணியளவில் ரிக்டரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று பிற்பகல் 2.17 மணியளவில் திபெத்தில் ரிக்டரில் 3.0 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவானது. இதேபோன்று மியான்மரில் 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரில் நேற்றிரவு 7.48 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. துருக்கியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவை நெருங்கியுள்ள அண்டை நாடுகளில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
