வங்காளதேசம்: இந்து வாலிபர் உயிருடன் எரிந்து பலியான கொடூரம்; கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு
டாக்கா, வங்காளதேசத்தின் நர்சிங்டி நகரில் சஞ்சால் பவுமிக் (வயது 25) என்ற இந்து வாலிபர் ஒருவர் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் இரவில் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியதில் சிக்கி உயிருடன் எரிந்து பலியானார். இதுபற்றி நர்சிங்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அப்துல்லா அல் பரூக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடையில் தீப்பிடித்து எரிந்தபோது நபர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி, சுற்றி வந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. மின் கசிவா? அல்லது அந்நியர்கள் யாரேனும் தீ வைத்து விட்டனரா? என விசாரித்து வருகிறோம் என்றார். கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்க முயன்றனர். எனினும், அவர் உடல் கருகி பலியாகி விட்டார். யாரும் இதுவரை (இன்று) கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். எனினும், இது திட்டமிட்ட சதி என்றும் அவரை படுகொலை செய்து உள்ளனர் என்றும் பவுமிக்கின் குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், கடந்த டிசம்பர் மத்தியில் இருந்து பரவி வரும் வன்முறை, கும்பல் தாக்குதல் சம்பவங்களால் பல்வேறு பகுதிகளிலும் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என இந்துக்கள் குறி வைத்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
