அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல்; 13 ஆயிரம் விமானங்கள் ரத்து
வாஷிங்டன், அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூ மெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட் லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. பல இடங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த மின்வெட்டு லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை கடுமையாக பாதித்துள்ளது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பனிப்புயல் தாக்குதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓக்லஹோமா நகரில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலை யத்தில் அதிகளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இந்த பனிப்புயல் அமெரிக்காவை முடக்கி போட்டு உள்ளது. மக்கள் வீட்டுக் குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
