எஸ்.ஏ. டி20: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ்
கேப் டவுன், 4-வது எஸ்.ஏ. லீக் டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பிரிட்டோரியா கேப்பிடல்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் எஸ்.ஏ. லீக் டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் மேதிவ் 68 ரன்களையும், ஸ்டப்ஸ் 63 ரன்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தென்ஆப்பிரிக்கா டி20 தொடரில் (எஸ்.ஏ. லீக் ) சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வெல்வது இது 3வது முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
