வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ‘ஜெட்' வேகத்தில் எகிறி வந்து, நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டிப்பிடித்து இருந்தது. தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.215-ம், சவரனுக்கு ரூ.1,720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்திருந்தது. நேற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.450 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,60,000-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200 22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600 22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600 21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600 18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

மூலக்கதை