ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் பேட்டரி நிற்கும்.. அறிமுகம் ஆகும் ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத தொலைத்தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. வெறும் அழைப்புகளுக்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு, ஆன்லைன் பரிவர்த்தனை என அனைத்திற்குமானதாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உலகமே உள்ளங்கைக்குள் என்று சொல்வது கிட்டத்தட்ட நிஜமாகவே மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் ஊடுருவிவிட்டன. ஸ்மார்ட்போன்களில் வீடியோக்கள், இணைய வசதி என பொழுதுபோக்கிற்காகவும் அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் பெரும் பிரச்சினையாக சார்ஜ்கள்தான். இதனால் தற்போது செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய பேட்டரிகளை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி (Realme) 10001 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட செல்போனை வரும் ஜன. 29ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருவாரம் பேட்டரி நீடிக்கும்; 32 மணி நேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்றும் ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.25,000 – ரூ.30,000க்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
