டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
ஜோகன்னஸ்பர்க், டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன. சில வீரர்கள், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால், மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டோனி டி சோர்சி மற்றும் டொனோவன் பெரீரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலகக்கோப்பை டி20 தொடருக்கான அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரியான் ரிகெல்டன் மற்றும் நடுவரிசை அதிரடி பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணியின் மூத்த நட்சத்திர வீரரான டேவிட் மில்லருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. அவரின் காயத்தை பொறுத்து, அவர் அணியில் இருப்பாரா என்பது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
’மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ - கனிமொழி எம்.பி.
ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வால்பாறை அருகே காட்டுப்பகுதியில் திடீர் தீ; மரங்கள் எரிந்து நாசம்
அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி
திமுக அரசை கண்டித்து வேலூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
