டிக்டாக்கில் கிடைத்த நட்பு: இலங்கையில் வங்கி ஊழியருக்கு ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் டிக்டாக் செயலி மூலம் பழகி வங்கி ஊழியர் ஒருவரை ஏமாற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் தனியார் வங்கி ஊழியர் ஓருவர் டிக்டாக் சமூக ஊடக செயலி மூலம் அறிமுகமான ஒருவரால் ஏமாற்றப்பட்டு பெருந்தொகை மற்றும் தங்க நகைகளை இழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.கடந்த 19ம் திகதி இரவு தனியார் வங்கி ஊழியர் டிக்டாக் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான நண்பரை சந்திப்பதற்காக பொரலஸ்கமுவ, கட்டுவாவலவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த வங்கி ஊழியரை வாசனை திரவியம் ஒன்றை சுவாசிக்க செய்து டிக் டாக் நண்பர் மயக்கம் அடைய செய்துள்ளார்.இதையடுத்து அடுத்த நாள் ஹோட்டல் அறையில் கண் விழித்து பார்த்த அவர், தான் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வங்கி அட்டை மற்றும் 258,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் உடனடியாக இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கோட்டை, படுஹேன பகுதியில் வசிக்கும் முன்னணி தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
