பாலஸ்தீன பிரச்சனை குறித்து கவலை இல்லை.. கைவிரித்த சவுதி இளவரசர் -Not worried about the Palestine problem.. Saudi prince statement
பாலஸ்தீனம் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக நடத்தி வரும் தாக்குதலில் 41,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 95,000 துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். போரை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துவந்தாலும் அதற்கு எதிர்மாறாக தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.பிளிங்கன் வருகை இந்நிலையில் பாலஸ்தீன பிரச்சனை குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று சவுதி அரேபியாவின் இளவரசர் கூறியுள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்கும் நிலையில் சவுதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு கவனம் பெற்று வருகிறது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அல்- உலாஅவ்வாறு கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை அல்- உலா என்ற பாலைவன சோலையில் வைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பாலஸ்தீனம் பிரச்சனை குறித்து பிளிங்கன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, பாலஸ்தீன பிரச்சனை குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கவலையும் இல்லை, ஆனாலும் சவுதி மக்கள் அந்த பிரச்சனையை முக்கியமானதாகப் பார்க்கின்றனர்.போர் நிறுத்தம்சவுதி அரேபியா மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதால் அவர்களை இந்த விவகாரம் ஈர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து பிளிங்கன் எழுப்பிய கேள்விக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா எந்த விதத்திலும் தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் கூறியுள்ளது. அட்லான்ட்டிஸ் செய்தி சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள சவுதி உயர் அதிகாரி ஒருவர், அதை முற்றிலும் மறுகாதது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
