எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க பா.ஜ.க. தலைவர்களுக்கு அமித் ஷா ஆணை: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு/ Amit Shah asked BJP leaders to split Opposition Uddhav Thackeray's big charge
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தரவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது. இநத வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் அறுவடை செய்ய இந்த கூட்டணி விரும்புகிறது. அதேவேளையில் மக்களவையில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பா.ஜ.க. கூட்டணி விரும்புகிறது.இந்த நிலையில் பா.ஜ.க. தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் "சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பா.ஜ.க.வால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும்.30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க., பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது (எதிர்க்கட்சி தலைவர்கள்) தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன். வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை.இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
