peoples life affected in Nepal lamndslides/நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காத்மண்டு:நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
