ஒரு மாசம் கெடு.. ரோடு தரமா இருக்கனும்.. டெல்லி முதல்வரின் டார்கெட் / Delhi CM Atishi Marlena assure pothole-free roads before Diwali
டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்." "1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.""திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.""அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
