One militant killed during encounter in Kathua/3-வது கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு: காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது.இதையடுத்து, அப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். போலீசார் சார்பில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனே சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.இதுதொடர்பாக, ஜம்முவின் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின் கூறுகையில், 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பயங்கரவாதியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தலின்போது பயங்கரவாத தாக்குதலோ அல்லது வன்முறையோ நடக்காமல் இருக்கும் என தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
