Mehidy Hasan returns to T20 squad for India series/இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வங்கதேச அணியில் இணைந்த ஆல் ரவுண்டர்
டாக்கா:இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.இந்நிலையில், இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் வீரர்கள் விவரம் வருமாறு:நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் எமான், தவ்ஹித் ஹிருடோய், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷத் ஹொசைன், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.14 மாத இடைவெளிக்கு பிறகு ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
