Shoaib Bashir survives being 'bowled' courtesy of fallen towel / முதல் பந்திலே போல்ட்.. கீழே விழுந்த டவல் - அப்புறம் நடந்த ட்விஸ்ட்
இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சோமர்செட் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார். ஆனால் அந்த பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இதை கவனித்த பஷீர் நடுவரிடம் தெரிவிக்க, அந்த பந்தை டெட் பாலாக நடுவர் அறிவித்தார்.பேட்ஸ்மேன் பந்தை சந்திக்கும் போது கவன சிதறல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசைவுகள், சத்தம் கேட்டால் அந்த பந்து டெட் பாடலாக அறிவிக்கப்படும்.அதனால் பஷீர் தனது விக்கெட்டை காப்பாற்றினார். ஆனால் பஷீர்க்கு நீண்ட நேரம் இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. அபோட் பந்துவீச்சில் அடுத்த 2 பந்துகளிலேயே பஷீர் டக் அவுட் ஆனார்.இதன் விளைவாக, சோமர்செட் முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டது.Kyle Abbott nearly had two wickets in two balls... But a towel fell out of Abbott's back pocket in his delivery stride, and it was deemed a dead ball. pic.twitter.com/9jTYDoABfk




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
