இந்தியா-வங்காளதேசம் போட்டி மழையால் தாமதம்/India-Bangladesh match delayed due to rain
கான்பூர்:வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. நேற்றைய 2-வது நாள் போட்டியும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.இன்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.ஆட்டத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது. போட்டியை திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. நடுவர்கள் ஆடுகளத்தை பாவையிட்ட பிறகு போட்டியை தொடங்க இயலாது என்று தெரிவித்தார்.காலை 10 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மைதானத்தை பார்வையிட்டனர். அப்போது இதே நிலையே நீடித்தது. போட்டியை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
