மைதானத்தில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. அவசரமாக திருப்பி அனுப்பிய இந்தியா-Controversy that a Bangladeshi fan was attacked in the stadium.. India hastily sent him back
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட டைகர் ராபி என்ற வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார். மைதானத்தில் இருந்து டைகர் ராபி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.VIDEO | Bangladesh cricket team's 'super fan' Tiger Roby was allegedly beaten up by some people during the India-Bangladesh second Test match being played at Kanpur's Green Park stadium. He was taken to hospital by the police.#INDvsBAN #INDvsBANTEST pic.twitter.com/Tk5fOCLBTJஆனால் டைகர் ராபி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டைகர் ராபி 12 நாள் மெடிக்கல் விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இந்தியா- வங்கதேசம் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளுக்கு புலி வேடம் போட்டு சென்று வந்துள்ளார். சென்னையில் நடந்த போட்டிக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது. எனவே தற்போது டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் நாடுகடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், டைகர் ராபியின் 12 நாள் மெடிக்கல் வீசா இன்றுடன் [செப்டம்பர் 29] முடியவடைவதால் அவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
