2nd day collection of Devara film / தேவரா படத்தின் 2-ம் நாள் கலெக்ஷன்

  மாலை மலர்
2nd day collection of Devara film / தேவரா படத்தின் 2ம் நாள் கலெக்ஷன்

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்இந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிரகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 2-ம் நாள் முடிவில் இப்படம் 243 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான கோட் படத்தின் முதல் 2 நாள் வசூலை விட தேவரா திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.The wave of #Devara's rage FLOODS the Box Office putting ALL TERRITORIES on notice! ??? ???? ????????? ???? ??? ??????+ ??- https://t.co/iW0OygM2Qc#BlockbusterDevaraMan of Masses @tarak9999 #KoratalaSiva #SaifAliKhan #JanhviKapoor… pic.twitter.com/MzOI32kUN2

மூலக்கதை