Srilanka beat Newzealand in 2nd test/2வது டெஸ்டில் வெற்றி: நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை
காலே:இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.சண்டிமல் (116), கமிந்து மெண்டிஸ் (182 நாட்அவுட்), குசால் மெண்டிஸ் (106 நாட்அவுட்) ஆகியோர் சதம் விளாசினர்.அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. சான்ட்னர் 29 ரன்கள் எடுத்தார். இலங்கையின் பிரதாப் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 514 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே அரை சதமடித்து 61 ரன் எடுத்தார். கேன் வில்லியம்சன் 46 ரன் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 78, சான்ட்னர் 67, டாம் பிளெண்டல் 60 ரன்னும் எடுத்து போராடினர்.இறுதியில், நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் 2-0-என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.இலங்கை அணி சார்பில் நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.ஆட்ட நாயகனாக கமிந்து மெண்டிசும், தொடர் நாயகனாக பிரபாத் ஜெயசூர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
