Not about to die so soon: Kharge takes jab at PM Modi after falling ill while speaking on stage/பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்காமல் செத்துவிட மாட்டேன்: கார்கே ஆவேசம்
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கேவுருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்தனர். இதையடுத்து, சிறிது ஓய்வெடுத்தபின் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத்தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை உயிருடன் இருப்பேன் என ஆவேசமாகத் தெரிவித்தார்.#WATCH | J&K: Congress National President Mallikarjun Kharge says, "We will fight to restore statehood...I am 83 years old, I am not going to die so early. I will stay alive till PM Modi is removed from power..." https://t.co/dWzEVfQiV0 pic.twitter.com/ES85MtuTkL




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
