Bangladesh T20 series - India squad announced / வங்கதேசத்துக்கு எதிரான, டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (WK) , ரிங்கு சிங் ,ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி ,சிவம் துபே ,வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 150 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.NEWS ? - #TeamIndia's squad for T20I series against Bangladesh announced.More details here - https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
