IPL 2025 rules to retain players released / ஐபிஎல் 2025 சீசனில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிகள் வெளியீடு

  மாலை மலர்
IPL 2025 rules to retain players released / ஐபிஎல் 2025 சீசனில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிகள் வெளியீடு

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எதனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். இது அவரது ஒப்பந்தத் தொகைக்கு கூடுதலாக இருக்கும். அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும். வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது.ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் ஐபிஎல் தொடர் துடங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார். இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2025 முதல் 2027 வரையிலான காலகட்டம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.NEWS ? - IPL Governing Council announces TATA IPL Player Regulations 2025-27.READ - https://t.co/3XIu1RaYns #TATAIPL pic.twitter.com/XUFkjKqWed

மூலக்கதை