MS Dhoni will play in the 2025 IPL series / எம்.எஸ்.டோனிக்காக மாற்றப்பட்ட ஐபிஎல் விதி

  மாலை மலர்
MS Dhoni will play in the 2025 IPL series / எம்.எஸ்.டோனிக்காக மாற்றப்பட்ட ஐபிஎல் விதி

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எதனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.ஐபிஎல் தொடர் துடங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்மூலம் uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கலாம். எம்.எஸ்.டோனிக்காகவே இந்த விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை