Priests Steal Money from Anjaneya Temple / ஆஞ்சநேயர் கோவிலின் உண்டியல் பணத்தை திருடும் பூசாரிகள்
கர்நாடகாவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் எண்ணப்படும் உண்டியல் பணத்தை கோவில் பூசாரிகள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோ தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை போல கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாக ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ராமச்சந்திரா, "கோவில் பணத்தை திருடிய 2 செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 சமையல்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நன்கொடை எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பக்தர்களின் காணிக்கைகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. ஆஞ்சநேய ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்தும் போது பக்தர்கள் பயப்பட தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மோசடி செய்யவோ, திருடவோ வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.This is why Government should handover the administrative duties to the temples..Here in GaaLi Anjaneya Swamy Temple, Bengaluru, administration staff is pocketing money while it's counted.. and after few seconds picked up another bundle and handing it over to another guy.. Shame pic.twitter.com/fI1RF27Dyx




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
