பாஜகவின் வலிமையால் இஸ்லாமியர்கள் இனி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' பாடுவார்கள் - யோகி சொன்ன பிளாஷ்பேக்-Muslims Will Now Sing 'Hare Rama Hare Krishna' With BJP's Strength - Yogi Adityanath Flashback
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நலனை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆகியவை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் காஷ்மீரிலும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அரியவாவில் பரிதாபாத் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நான் ஜம்மு காஷ்மீரில் இருந்தேன். அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நான் விமான நிலயத்தினுள் சென்றேன். அப்போது ஒரு மனிதர், 'யோகி சாஹேப் ராம் ராம்' என்று கூறி என்னை வரவேற்றார். அந்த மனிதர் ஒரு மௌலவி [இஸ்லாமிய மத போதகர்] என்று பின்னரே உணர்ந்தேன். ஒரு இஸ்லாமிய மத போதகரிடம் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது குறித்து ஆச்சர்யம் அடைந்தேன். சிறப்பு அந்தஸ்தை [சட்டப்பிரிவு 370 ஐ] நீக்கியதன் தாக்கமே இது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] தெருக்கள் தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கூட கோஷமிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். யோகிஆதித்யநாத்தின் பேச்சைக் கேட்டு பிரச்சார கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக எந்த போராட்டங்களும் கலவரங்களும் நடக்கவில்லை என்றும் யோகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
