அமெரிக்க பெண் உருவாக்கிய பாலியல் சாம்ராஜ்யம்.. ஆசிய பெண்களை வைத்து இயங்கிய ஹை கிளாஸ் நெட்வொர்க் - A sex empire created by an American woman.. A high class network run by Asian women
அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
