திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- Leopard walk on the Tirupati
திருப்பதி:திருப்பதியில் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்றது.இந்த சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது. கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டன.நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் சிறுத்தை பயமின்றி நடைபாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்தது.இதனைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர்.அப்போது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்தியது. இதனால் சிறுத்தை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது.மீண்டும் நடைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று 71,133 பேர் சாமி தரிசனம் செய்தனர். 35,502 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
