ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பிரியங்காவின் பேரணி ரத்து - பாஜக சதி - காங்கிரஸ் புகார்- Refusal of permission to land helicopter.. Priyanka's rally canceled - BJP conspiracy - Congress complains
காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லால்க்கு ஆதரவு திரட்ட கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைப்பட்டது.ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதவின் இரண்டு கட்டங்கள் முடித்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மூன்றாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ்- என்சிபி கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய காஷ்மீர் வந்த நிலையில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி ஹெலிகாபட்டரில் புறப்பட்டு வந்த நிலையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது பிரச்சார பேரணி தடைபட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டதுஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பிரியங்காவின் பேரணி ரத்து - பாஜக நாசகர வேலை - காங்கிரஸ் புகார்பிரியங்கா காந்தியை பேரணியில் பங்கேற்க விடாமல் பாஜக திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவீந்தர் சர்மா, பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணவத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
