மின் தடை பிரச்சனைக்கு இலவச சேவை மையம்/மின் தடை பிரச்சனைக்கு இலவச சேவை மையம்
புதுச்சேரி:புதுச்சேரியில் மின்தடை பிரச்சனை குறைகளை பெற்று சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் இலவச சேவை மையம் அமலுக்கு வந்தது. இது குறித்து மின்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-மின்துறையின் 1912 மற்றும் 18004251912 ஆகிய எண்களுடன் கூடிய 24 மணிநேர மின் உபயோகிப்பாளர் இலவச சேவை மையம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.கடந்த காலங்களில் பொதுவான அல்லது தனிநபர் இணைப்புகளில் மின்தடை ஏற்படும் போது இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் யாரிடம் தகவல் தெரிவிப்பது என்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் மக்கள் தவித்து வந்தனர்.உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போது அவர்களது செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை. அடுத்தபடியாக அலுவலகத்திற்கு நேரில் சென்று தகவல் சொல்ல சென்றால் அலுவலகம் பூட்டி இருக்கிறது.இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் விதமாக 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.சேவை மையத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் உடனடியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-ஆப் வாயிலாகவும் எஸ்.எம்.எஸ். மூலமும் உரிய பகுதியை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு மின்தடை சரி செய்யப்படும். அவசர காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.எனவே, மின்துறையின் 1912 மற்றும் 1800425191224 நேர மின்துறை சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
