இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது/The campaign ends today
ஸ்ரீநகர்:90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரலிபா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதால் முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இன்று தனது பிரசார கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தனது கட்சி பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
