மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதல்- 9 பேர் பலி- MP Lorry Accident 9 dead

  மாலை மலர்
மத்திய பிரதேசத்தில் லாரி மீது பஸ் மோதல் 9 பேர் பலி MP Lorry Accident 9 dead

போபால்:மத்திய பிரதேம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் உத்தரபிரதேசத்தின் ரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்குச் சென்றது. நாடன் தேஹத் என்ற இடத்தில் பஸ் சென்றபோது லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை