'Whale vomit' worth Rs 6.2 crore seized - 3 arrested / ரூ.6.2 கோடி மதிப்புள்ள 'திமிங்கல வாந்தி' பறிமுதல் - 3 பேர் கைது
மகாராஷ்டிராவில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ திமிங்கல வாந்தியை (அம்பர்கிரிஸ்) போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காரில் பைப்லைன் ரோட்டில் இருந்து பத்லாபூருக்கு திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.திமிங்கில வாந்தி (Ambergris) என்பது திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம்.இதனை பயன்படுத்தி வாசனை திரவியம், மருந்து மற்றும் மசாலாக்கள் தயாரிக்கபடுகிறது.இந்தியாவில் திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் திமிங்கிலத்தின் வாந்தியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
