இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்- பிரதமர் மோடி- PM Modi Says People should buy products made in India

  மாலை மலர்
இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் பிரதமர் மோடி PM Modi Says People should buy products made in India

புதுடெல்லி:பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் பேசி வருகிறார். இன்று தனது 114-வது உரையில் மோடி கூறியதாவது:-நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நான் அமெரிக்கா சென்றபோது இந்தியாவை சேர்ந்த 300 கலைப்பொருட்கள் மீட்டு கொண்டு வரப்பட்டன.அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தனது தனிப்பட்ட இல்லத்தில் கலைப்பொருட்கள் சிலவற்றை எனக்குக் காட்டினார். மீட்ட கலைப்பொருட்கள் டெரகோட்டா, கல், தந்தம், மரம், தாமிரம் மற்றும் வெண்கலம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டவை.சில மொழிகள் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட மொழிகளில் ஒன்று நமது 'சந்தாளி' மொழியாகும். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் சந்தாளிக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.மரக்கன்று நடுதல் ஒரு அற்புதமான பிரசாரம். உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்துள்ளன.மனதின் குரல் நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோவிலுக்கு சென்று கடவுளைப் பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்துக்கு ஆற்றும் பணிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகிறது.இந்த நிகழ்ச்சி உணர்ச்சிமிக்க அத்தியாயமாகும். இந்தியாவின் உணர்வை கொண்டதாகும். மக்கள் நேர்மையான விஷயங்கள், ஊக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டுகள் கதைகளை விரும்புகிறார்கள்.மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐ) அதிகரிப்பு அதன் வெற்றிக்கு சாட்சியாகும் . இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும்.புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் முற்றிலும் தூய்மைபடுத்துகின்றனர்.இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

மூலக்கதை